மதக்கலவர தடுப்பு சட்டத்தை - தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்....

மத கலவர தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி   அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த கவன ஈர்ப்பு மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மதக்கலவர தடுப்பு சட்டத்தை -  தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்....

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலைச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டி வெறுப்பு அரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றது.

திருச்சி புத்தூர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விசிக தலைவர் திருமாவளவன்,  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் மதக்கலவர தடுப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைத்து வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.