27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி...

கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

27  மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி...

சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் தேநீர் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் கொந்தளித்து போன தேநீர் பிரியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், டீ கடைகளை திறக்காமல், டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்கலாம் என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும், கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.