ரூபாய் 60 கோடியில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு!!

ரூபாய் 60 கோடியில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை 60 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ் புத்துபட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பெண்களுக்கு யோகா பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் பாராட்டினார் என தெரிவித்தார்.