நெல் கொள்முதல் செய்ய விவசாயிடம் கராராக லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்... பேரம் பேசும் ஆடியோ இணையத்தில் வைரல்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு ஊழியர் ஒருவர் விவசாயிகளிடம் கராராக லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெல் கொள்முதல் செய்ய விவசாயிடம்  கராராக லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்... பேரம் பேசும் ஆடியோ இணையத்தில் வைரல்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் மூட்டைகைளை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டுமென விவசாயிகளிடம் கராராக  கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

தாங்கல்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி நாராயணனிடம் அரசு ஊழியர் கிருஷ்ணன்  லஞ்சம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் லஞ்சம் கேட்ட கிருஷ்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.