சாமானிய மக்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்து வரும் காய்கறிகளின் விலை!!

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவது சாமானிய மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. 

சாமானிய மக்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்து வரும் காய்கறிகளின் விலை!!

மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியிருந்தது.

விலை உயர்வால் காய்கறிகளை வாங்க முடியாமல் சாமானிய மக்கள் திணறி வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், கிலோ தக்காளி 8 ரூபாய்க்கு விலை போகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கனிசமாக குறைந்துள்ளதால், சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.