வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டில் நல்ல முடிவு எடுக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5%  இடஒதுக்கீட்டில் நல்ல முடிவு எடுக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, பென்னாகரம் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மிகவும் பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 20 சதவீதத்தில், உள்ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தொற்றை குறைக்க இரவு, பகலாக உழைத்து கொண்டிருப்பதாக கூறிய அவர், இடஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அளித்துள்ளதையும் குறிப்பிட்டு பேசினார்.