
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் துபாய், சார்ஜா ,அபுதாபி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர்.
அதில் சந்தேகப்படும் படியாக வந்த 5 பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் சென்னை, ராமநாதபுரம்,ஆந்திரா மற்றும் திருச்சியை சோ்ந்தவர்கள் என்றும் அவர்கள் 5 பேரும் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 10 பார்சர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவைகளை திறந்து பார்த்த அதிகாரிகள், அதிலிருந்த சுமார் 2.55 கிலோதங்கபசைகளை பறிமுதல் செய்தனர். அவைகளின் மதிப்பு ரூ. 1.16 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார்,ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.