ஆட்டு கொட்டகையில் தீ விபத்து...!

கடையம் அருகே ஆட்டு கொட்டகையில் தீ விபத்து...

ஆட்டு கொட்டகையில் தீ விபத்து...!

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் ராஜ் (50). இவருக்கு சொந்தமான வயல் கடையத்தில் இருந்து ராமநதி அணை செல்லும் வழியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ளது. இங்கு ராஜ் கடந்த மூன்று ஆண்டுகளாக வயலின் நடுப்பகுதியில் சிமெண்ட் ஷீட் மற்றும் தார்ப்பாய் மூலம் கொட்டகை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் ஆடுகளுக்கு காவல் இருந்து விட்டு, இன்று காலை சுமார் 5 மணி அளவில் தனது ஊருக்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆட்டு கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிவதாக ராஜ்க்கு  தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் ஆட்டுக்குட்டிகள் உட்பட சுமார் 20 ஆடுகள் தீயில் எரிந்து பலியாகின. 

இது குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இயற்கையாக தீப்படித்ததா அல்லது யாரேனும் தீ வைத்தனரா என்ற கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.