ஆசிரியரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்...

ஆசிரியர் தினத்தையொட்டி, நாகர்கோவிலில் தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக காரணமாக இருந்த ஆசிரியரின் கல்லறைக்கு சென்று மாணவர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்...

ஆசிரியர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக காரணமாக இருந்தது மட்டுமல்லாமல், மாணவப் பருவத்தில்  தங்களது கிழிந்த சட்டையை கூட  தைத்து தந்து இரண்டாம் தாயாக உருவாக்கிய மறைந்த ஆசிரியரின் கல்லறைக்கு முன்னாள் மாணவர்கள் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கலுங்கடி பகுதியை சேர்ந்த மறைந்த ஆசிரியை லீலா பாய் தான் பணிபுரிந்த காலங்களில் மாணவர்களுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல் இரண்டாம் தாயாக இருந்து அவர்களுக்கு கல்வி போதித்த தோடு கிழிந்த சட்டை தைத்துக் கொடுத்து சொந்தப் பிள்ளைகள் போன்று பாவித்து அவர்கள் நல்ல நிலைக்கு உயர காரணமாக இருந்தார்.

இதனை நன்றியோடு நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினத்தை ஒட்டி லீலாபாயிடம் படித்த மாணவ மாணவிகள் அவரது கல்லறைக்கு சென்று  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வழக்கமாக அவரிடம் படித்த ஏராளமான மாணவர்கள் அஞ்சலி செலுத்துவது உண்டு. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மிக குறைந்த அளவில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று  மறைந்த ஆசிரியரின்  கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து முன்னாள் மாணவர் முத்துக்குமார் என்பவர் கூறும்போது "தங்கள் ஆசிரியையை தங்களுக்கு கல்வி சேவை அளித்ததோடு மட்டுமல்லாமல் இரண்டாம் தாயாக இருந்து தங்களை கவனித்ததாகவும், தங்களை பெற்ற பிள்ளைகள் போல பாவித்து வளர்த்ததும் இதை செய்து வருவதாக கூறினார்.