ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி...

மாணவர்களுக்கு Assignments தருவது கட்டாயம்.

ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி...

அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் Assignments வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில், Greeting Card தயாரித்தல், படம் வரைதல் போன்ற Assignments தரப்பட வேண்டும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற Assignments தரப்பட வேண்டும்.

9, 10-ம் வகுப்பினருக்கு புத்தக விமர்சனம் போன்ற Assignments தரப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் இருந்து CEO-க்களுக்கு வழங்கப்படும் Assignment-களையே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தர வேண்டும்.

கற்றல் - கற்பித்தல் இடைவெளி இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதை நிவர்த்தி செய்யவே Assignment வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு.

மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Assignments தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை அறிவுறுத்தல்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் Assignments விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்கவும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு.