திருமணத்தை நிறுத்திய காதலி.. வேறொரு ஆணுடன் நிச்சயதார்த்தம்..காதலன் எடுத்த விபரீத முடிவு..!
5 வருட காதலில் காதலனின் மதுபழக்கம் குறித்து அறியாத காதலி..!

காதல் ஜோடி:
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் மகேஷ்வர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மகேஷ்வர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார்களிடமும் காதலை பற்றி கூறி, சம்மதம் வாங்கிய நிலையில், திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது.
அதுபழக்கத்தால் நின்ற திருமணம்:
இதற்கிடையில் மகேஷ்வர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அத்தோடு அவருக்கு மதுபழக்கமும் அதிகரித்து வந்துள்ளது. இதனை அறிந்த அப்பெண்ணும், அவரது உறவினர்களும் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
காதலன் தூக்கிட்டு தற்கொலை:
இதனால் ஏற்கனவே மகேஷ்வர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து, அப்பெண்ணுக்கு வேறொரு பையனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் மேலும் விரக்தியடைந்த மகேஷ்வர் தன் வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
காவல்துறை விசாரணை:
தகவலறிந்த காவல்துறையினர், மகேஷ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விசாரணை மேற்கொண்டனர்.