ஊருக்குள் நுழைந்த ராட்சத முதலை

ஊருக்குள் நுழைந்த ராட்சத முதலை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஊருக்குள் புகுந்தது.

மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து சித்தமல்லி கிராமத்திற்குள் ராட்சத முதலை ஒன்று புகுந்தது. இதையறிந்த அப்பகுதிய சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதலையை வெற்றிகரமாக பிடித்த அப்பகுதி இளைஞர்கள் கயிறு மூலம் கட்டி வைத்தனர். இந்நிலையில் முதலையைப் பார்க்க அங்கு ஏராளமானோர் திரண்ட நிலையில், ஆபத்தை உணராமல் அதனை கிராம இளைஞர்கள் சீண்டி விளையாடினர்.

மேலும் தகவல் அளித்து பல மணி நேரமாகியும் வனத்துறையினர் வராததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது