மின் விளக்குகளால் ஒளிரும் தலைமைச் செயலகம்  

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற சாலைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளது.

சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டப்பேரவையில் கருணாநிதி பட திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது . தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.  விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில், போர் நினைவுச் சின்னம் முதல் தலைமைச் செயலகம் வரை சாலையில் இருபுறங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ள தலைமைச் செயலகம் முன், சாலையில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள். செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.