கட்சி பிரச்சனையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த காயத்ரி..!

கட்சி பிரச்சனையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த காயத்ரி..!

பாஜக நிர்வாகி திருச்சி சூரியா பேசியதாக பரவி வரும் சர்ச்சை ஆடியோவால் பாஜகவின் பல சம்பவங்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், சூர்யாவை கைது செய்ய வேண்டும் என முதலைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

ஆடியோ சர்ச்சை:

பாஜக ஓபிசி பிரிவு செயலாளர் திருச்சி சூர்யா சிவா, பாஜக பெண் நிர்வாகியிடன் ஆபாசமாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், இந்த ஆடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

6 மாதம் இடைநீக்கம்:

காயத்ரி ரகுராமின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமை, காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்றும், கட்சியை சேர்ந்தவர்கள் அவருடன் எந்த பேச்சு வார்தையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை ஒரு அறிககி வெளியிட்டார்.

இதையும் படிக்க: காயத்ரிக்கு ஆதரவாக வந்த கஸ்தூரி..! மானம் கெட்ட பிழைப்பு என ஆவேசம்..!

காயத்ரி குற்றச்சாட்டு:

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், தனிப்பட்ட முறையில் யார் என்னைத் தாக்கினாலும் அவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். இது என் உரிமை. கருத்துரிமையை முடக்குவது வருத்தமாக இருக்கிறது. அதற்காக என்னை இடை நீக்கம் செய்திருப்பது, அதுவும் கட்சிக்குக் களங்கம் என்று கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எட்டு வருடமாக என் உழைப்பை கட்சிக்கு கொடுத்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது பாஜகவுக்கு நான் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

காயத்ரி விளக்கம்

அண்ணாமலையிடம் புகார்:

சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியிருக்கும்போது, நாங்கள் கொந்தளிப்பது இயல்புதான். அது என் உரிமை. ஆனால், அண்ணாமலையின் முடிவை நான் விமர்சிக்க முடியாது. ஆனால், அது வருத்தமளிக்கிறது. காசியில் நடக்கும் தமிழ்ச் சங்கமத்திற்கு எங்களையெல்லாம் அழைக்கவேயில்லை. நிறையப் பேர் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அவர்களையெல்லாம் அழைக்கவில்லை. அதைப் பற்றி மட்டும் சிறிய அளவில் பதிவிட்டேன். மற்றபடி கட்சிக்கு எதிராக எதையும் கூறவில்லை எனக் கூறியவர்,  

அண்ணாமலை என்னிடம் பேசிதாகவும் தெரிவித்துள்ளார். அதில், இதுவரைக்கு உங்களுக்கு என்ன செய்யவில்லைன்னு புகார் சொல்கிறீர்கள் என அண்ணாமலை கேட்டதற்கு, ஃபெஃப்சி சிவாவின் விவகாரத்தை சுட்டிக்காட்டியதாகவும், என் பக்கத்தை நீங்கள் கேட்கவேயில்லை என்று கூறியதாக்கவும் தெரிவித்துள்ளார் காயத்ரி.

முதல்வருக்கு கோரிக்கை

முதலமைச்சருக்கு கோரிக்கை:

மேலும் பேசிய காயத்ரி ரகுராம், நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்றால், சூர்யா சிவாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். என்னை விசாரிக்க நேரம் கொடுக்கவில்லை. அவரை விசாரிக்க நேரம் கொடுக்கிறார்கள். சூர்யா சிவாவை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும். இன்று டெய்சிக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். 

சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதை விட மோசமானது. தமிழக முதலமைச்சர், சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.