போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பல் கைது.!!

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கத்தி உட்பட 4 டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பல் கைது.!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற போலீசார், போதை மாத்திரைகள் வைத்திருந்த முகமது ஷா மிர்கான் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை கொடுத்ததாக ராயப்பேட்டையை சேர்ந்த அத்னின் அலி என்பவரை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்த ஏர்கன் 4 டம்மி துப்பாக்கிகள், 2 கத்திகள், அரைக்கிலோ கஞ்சா, 10 வலி நிவாரண மருந்து பாட்டில்கள், 50 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனைதொடர்ந்து அத்னின் அலி டம்மிக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த  முகமது முதர்சிங் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர் மீது கோவாவில் போதைப்பொருள் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்ல இவர் தான் சென்னையில் பலருக்கும் போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.