எலியுடன் சதுரங்கம் விளையாடும் விநாயகர் : பள்ளி மாணவ மாணவிகளின் கைவண்ணம் !!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எலியுடன் சதுரங்கம் விளையாடும் விநாயகர் : பள்ளி மாணவ மாணவிகளின் கைவண்ணம் !!

தேன்கனிகோட்டை பகுதிகளில் பிரம்மாண்ட அரங்கங்கள் வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் எலியுடன் விநாயகர் சதுரங்கம் விளையாடுவது போல அரங்கம் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் சேமிக்கும் உண்டியல் பணத்தை கொண்டு விநாயகர் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக உள்ளது. அதேபோல இந்த ஆண்டு வித்தியாசமாக மாணவர்கள் தாங்கள் சேர்த்த உண்டியல் பணத்தை கொண்டு அப்பகுதியில் விநாயகரின் வாகனமான எலியுடன் விநாயகர் சதுரங்க விளையாட்டை விளையாடுவது போல காட்சி தரும் விநாயகர் அரங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமாக உள்ள இந்த விநாயகர் சிலை மற்றும் எலி, செஸ் விளையாட்டு ஆகியவற்றை அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.