மறைமுகமாக அரசை எச்சரித்த விக்ரமராஜா...வலியுறுத்திய கோரிக்கைகள் என்னென்ன?

மறைமுகமாக அரசை எச்சரித்த விக்ரமராஜா...வலியுறுத்திய கோரிக்கைகள் என்னென்ன?

வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நகர்வு வேறு பக்கமாக இருக்கும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மறைமுகமாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறைமுகமாக அரசை எச்சரித்த விக்ரமராஜா : 

தஞ்சாவூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை நோக்கி வணிகர் சங்க பேரமைப்பு பயணித்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு முன்பாக மே 5 ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றாத சூழல் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நகர்வு வேறு பக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : சசிகலாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...காரணம் என்ன?

தொடர்ந்து பேசிய அவர், வணிகர்களுக்கு ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால் வணிகர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது, அதனை வலியுறுத்த உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் ஈடுபடுவதில்லை என்றும் தெரிவித்தார்.