தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக  ரூ. 2049 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது...

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக  2 ஆயிரத்து 49 கோடி ரூபாய் வழங்கப்படாமல், நிலுவையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக  ரூ. 2049 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது,  தமிழக மக்களவை உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2019- 2021 நிதி ஆண்டு வரைக்கும் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி தொகை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

ஆனால் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020 ஏப்ரல் -201 மார்ச் காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு 9 ஆயிரத்து 845 புள்ளி  42 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அதே காலக்கட்டத்தில் வழங்க வேண்டிய 2,049 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 2021-2022ம் ஆண்டின் நவம்பர் 23ம் தேதி வரை மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் 14,108 கோடி ரூபாயாகவும், மாநில வருவாய் 18,966 கோடி ரூபாயாகவும் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.