தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட காதலி வேறொருவருடன் சென்றதால் விரக்தி : மனமுடைந்த வாலிபர் தற்கொலை !!

காதலியுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில்  காதலி, வேறு ஒருவருடன்  சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட காதலி வேறொருவருடன் சென்றதால் விரக்தி : மனமுடைந்த வாலிபர் தற்கொலை !!

திண்டிவனம் அடுத்த நபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு என்பவரது மகன் குமரேசன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடந்த  23ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மணப்பெண் வேறு ஒரு நபருடன் சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசனின் உறவினர்கள், அவருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் அதே தேதியில், அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து  வைத்துள்ளனர். இருப்பினும் குமரேசன் மனமுடைந்த நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று விவசாய நிலத்திற்கு சென்ற குமரேசன் அங்கிருந்த மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிநத வெள்ளிமேடு பேட்டை போலீசார் குமரேசன் உடலை  பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைத்ததோடு, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். காதலியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முன்பு காதலி வேறு ஒருவருடன் சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.