திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் லஞ்சம் மட்டுமே வளா்ச்சி பெற்றுள்ளதாக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி விமா்சித்துள்ளாா்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமுத்தூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கட்சிக்கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து விழாவில் பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டி பேசியவர், இந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளதாக தொிவித்தாா்.
தொடா்ந்து பேசிய அவா், அதிமுக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக தொிவித்த அவா், இனி வீதியில் நடப்பதற்கு கூட வரி விதித்து விடுவார்கள் என்று விமா்சித்தாா்.
இதையும் படிக்க : அமித்ஷா சென்னை வருகை...மக்களவை தோ்தல் குறித்து ஆலோசனை?
மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக அரசு திறந்து வைப்பதாகவும், அம்மா உணவகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டாா். திராவிட மாடல் ஆட்சியில் குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர் எனவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டதாவும் குறிப்பிட்டாா்.
தமிழ்நாட்டில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை அதிகாித்துள்ளதாகவும் எடப்பாடி தொிவித்தாா்.