ஜூன் 15 முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி !

ஜூன் 15 முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி !

ஜூன் 15ஆம் தேதி முதல் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்து மக்கள் இன்று மீன் வளத்துறை செயலாளரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுருக்கு வலை, சுற்று வலை போன்றவை பாரம்பரியமாக மீனவர்கள் பயன்படுத்தி வரும் மீன்பிடிப்பு முறையாகும். இதை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தடையின் காரணமாக பல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததாக தெரிவித்தனர். 

இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதத்தில் தடையை நீக்கியது எனவும் அதனையொட்டி மீன்பிடிக்க படகுகளை தயார் செய்த நிலையில் மீன்பிடி ஆய்வாளர்கள் தமிழக அரசின் உத்தரவு இருந்தால் தான் மீன் பிடிக்க முடியும் என்று கூறிய நிலையில்  கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசின் உத்தரவிற்காக காத்திருந்ததாகவும், பலமுறை துறை சார்ந்த செயலாளரை சந்திக்க முயற்சித்த நிலையில் இன்று நேரில் சந்தித்து பேசியதாக தெரிவித்தனர். 

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என மீன் துறை செயலாளர் கூறியதாகவும், முதலில் பதிவு செய்து இருந்தவர்கள் வருகிற  ஜூன் 15ஆம் தேதியில் இருந்து மீன்பிடிக்க செல்வதாகவும் தெரிவித்தார். மேலும் சுருக்கு மடி வலை மீன்பிடியை நம்பி 17 இலட்ச மக்கள் இருப்பதாகவும் அவர்கள் தற்போது பயன் அடைவார்கள் எனவும் கூறினர்.

இதையும் படிக்க:"பதவிக்காக எனது கொள்கையும் தத்துவமும் மாறாது" பி.டி.ஆர்