பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கருத்துரிமை நசுக்கப்படுகிறது - நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களின் கருத்துரிமை தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்  

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கருத்துரிமை நசுக்கப்படுகிறது - நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

சென்னை மைலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டல கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைவர் நல்லகண்ணு மற்றும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நல்லகண்ணு, மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  அரசியலமைப்பு வழங்கிய ஒவ்வொரு உரிமையையும் மத்திய அரசு பறித்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் கொள்கைக்காகவும் பொதுமக்களின் நலனுக்கு போராடி வரக்கூடிய நபர்களை பெகசிஸ் மூலம் ஒட்டுகேட்டு இருப்பது மிக பெரிய தவறு என்றும் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மேலும் மத்திய அரசு அறிவித்த வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து போராடி வரக்கூடிய விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து அதனை ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்த அவர் தமிழக அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாக இருந்ததாகவும் அதனை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.