வரும் புதன் முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும்!  

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வருகிற புதன்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலிக்  துவக்கி வைக்க உள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  பிறந்தாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நடைபெற்றது.  இதில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பெசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் பங்களிப்பில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்க இருக்கிறது என்றார்.

இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சியாக  அமையும் இந்த திட்டத்தை  வருகிற புதன்கிழமை  ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் நேரடியாக  தொடங்கி வைக்க  உள்ளதாக சுப்பிரமணியன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.