மாநகராட்சி மயானங்களில் இலவசமாக உடல் எரியூட்டும் சேவை - முதன்முறையாக தஞ்சை மாநகராட்சியில் தொடக்கம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக தஞ்சை மாநகராட்சி மயானங்களில் இலவசமாக உடலை எரியூட்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மயானங்களில் இலவசமாக உடல் எரியூட்டும் சேவை - முதன்முறையாக தஞ்சை மாநகராட்சியில் தொடக்கம்
Published on
Updated on
1 min read

தஞ்சை மாநகரில் ராஜகோரி, சாந்திவனம் மற்றும் மாறிகுளம் ஆகிய மயானங்கள் உள்ளன. இங்கு இறந்தவர்களை எரியூட்டுவதற்கு மாநகராட்சி கட்டணமாக 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 வரை வசூலிக்கப்பட்டு வந்தது.

சில நேரங்களில் ஏழை, எளிய மக்களால் இந்த தொகையை செலுத்த இயலாமல் அல்லாடும் அவல நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் இறந்தவரின் இறுதி நிகழ்வில் எவ்வித பிரச்சினையும் எழாமல் உடல் எரியூட்டப்பட தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, சாந்திவனம் ராஜகோரி மற்றும் மாறிகுளம் மயானங்களில் நடைபெறும்  உடல் தகனங்களை இலவசமாக எரியூட்டும் சேவையை மேயர் சன்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.   செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு பலியாகி சாந்திவனம் மயானத்தில் எரியூட்டப்பட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்காக அங்கு நினைவுத்தூண் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com