பெண்களுக்கு இலவச பேருந்து சேவை... மீண்டும் திமுகவை சீண்டும்  காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்ததற்கு, காயத்ரி ரகுராம் கோரிக்கை வைத்துள்ளார்.

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை... மீண்டும் திமுகவை சீண்டும்  காயத்ரி ரகுராம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையை பெற்று திமுக ஆட்சியை அமைத்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

யாரும் எதிர்பாரா நேரத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பெண்கள் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது.  திமுக தூரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துக் கொண்டே வருகிறது.

நகர பேருந்தில் எல்லா பெண்களும் இலவசமாக பயணிக்க முடியவில்லை என காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெள்ளை பலகை கொண்ட நகர பேருந்தில் மட்டுமே இலவசம் என்கிறீர்கள், பெண்களை அந்த பேருந்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டே இருக்கும் நிலை உள்ளது. முதல்வர் இது பற்றி பேசுவீர்களா?

 வெள்ளை பலகை மட்டுமே இலவசம் ஆனாலும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வெள்ளை பலகை பஸ் ஒரு முறை வரும், அவசரமாக பஸ்ஸைப் பெற முடியாது.  நீங்கள் பஸ் டிப்போவிலிருந்து பஸ் எடுக்க வேண்டும். ஆனால் தாமதமாகிவிடும் இது வேலைக்கு செல்லும் பெண்களின் குமுறல் என காயத்ரி ரகுராம் தெரிவித்து, இதற்கெல்லாம் என்ன செய்வதாக இருக்கிறீர்கள் என்ற முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.