பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி - மதுவந்தி மீது புகார்!

தனியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி மீது புகார் எழுந்துள்ளது.

பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி - மதுவந்தி மீது புகார்!

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத், சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், தன்னிடம் மதுவந்தி, 3 லட்ச ரூபாய் கொடுத்தால் பத்மசேஷாத்ரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறியதாகவும், இதனை நம்பி எட்டு பேர் தன்னிடம் கொடுத்த 19 லட்ச ரூபாயை மதுவந்தியிடம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நீண்ட மாதங்களாக பள்ளியில் சீட் கிடைக்காததால், பணம் கொடுத்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க மதுவந்தி 13 லட்ச ரூபாய் மட்டும் அளித்தாகவும், மீதி 6 லட்ச ரூபாயை கிருஷ்ண பிரசாத் கேட்டபோது அவரை அடியாட்கள் வைத்து மதுவந்தி தாக்கியதாகவும் கிருஷ்ண பிரசாத்தின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே மோசடி புகாருக்கு, மறுப்பு தெரிவித்துள்ள மதுவந்தி, பணத்தை ஏமாற்றிவிட்டு கிருஷ்ணபிரசாத் தன்மீது பழிசுமத்துவதாக தெரிவித்துள்ளார்.