சென்னை உயர்நீதி மன்ற புதிதாக நான்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்...!

சென்னை உயர்நீதி மன்ற  புதிதாக  நான்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்...!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகள் வரும் செவ்வாய் கிழமை பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா பதவிப்பிரமாணம்  செய்து வைக்கிறார்.

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த உயா் நீதிமன்றத் தலைமை பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேரை சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு  உத்தரவிட்டார்.

இதையும் படிக்க     } "2000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம்..! " - பி.ஆர். பாண்டியன்.

இதனையடுத்து புதிய நீதிபதிகள்  வரும் 23 -ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 10.35 மணிக்கு பதவியேற்க உள்ளதாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கூடுதல் நீதிபதிகள் நான்கு பேருக்கும் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும், 

இதனை தொடர்ந்து புதிய நீதிபதிகளை வரவேற்று தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்று உரையாற்ற உள்ளனர்.  இறுதியாக புதிய நீதிபதிகள் ஏற்புரை நிகழ்த்த உள்ளனர்.புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இன்னும் 11 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. .

இதையும் படிக்க     } " பணமதிப்பிழப்பு; மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.." - சீமான்.c