கறி கடையில் புகுந்து கறி வெட்டி, துணிக்கடையில் புகுந்து துணி தைத்து வாக்கு கேட்ட ஜெயக்குமார்!!

கறி கடையில் புகுந்து கறி வெட்டி, துணிக்கடையில் புகுந்து துணி தைத்து வாக்கு கேட்ட ஜெயக்குமார்!!

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வாக்கு கேட்டு சென்ற இடங்களில் துணி தைத்தும், கறி வெட்டியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில்  நகர்ப்புற தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு உத்திகளையும் கையில் எடுத்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 48 மற்றும் 53 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை 
ஆதரித்து முன்னாள்  அமைச்சர் டி.ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு வீட்டிற்கு சென்ற அவர், அங்கு துணி தைத்து வாக்கு சேகரித்தார்.

இதேபோல் கடை வீதியில் வாக்கு சேகரிக்கும்போது அங்கு இருந்த கறிக்கடை ஒன்றில் கறி வெட்டிக் கொடுத்தும் ஓட்டுகளை வேட்டையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்திக்கவே திமுகவினர் தயங்குவதாகவும், அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்றும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் தற்போது தனி மனிதனுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.