திமுக பிரமுகரை தாக்கிய வழக்கு...ஜாமீன் கோரி ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!!

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கு...ஜாமீன் கோரி ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!!

கடந்த 19 ஆம் தேதி கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக பிரமுகரை தாக்கி, சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யபட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கின் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற  ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் உடலில் காயங்கள் இல்லை எனவும் அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு என்றும்  மருத்துவ அறிக்கையிலும் காயங்கள் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

ஆகையால்  அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து காவல்துறை வேறு வேறு வழக்குகளில் கைது செய்வதாகவும் இதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாகவும் எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு  விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.