கே.எஸ்.அழகிரிக்கு எதிராக திரண்ட முன்னாள் தலைவர்கள்...?

தமிழ்நாடு காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கேஷ்டி மோதல்:
தமிழக காங்கிரஸின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு நடைபெற்ற கூட்டத்தின் போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விசாரணை நடத்த முடிவு:
இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர் எம்.பி., செல்வபெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தில், பிரச்சனைக்கு காரணமான ரூபி மனோகரன், எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, இருவருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, வருகிற 24-ம்தேதி அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க: கலவரமாக மாறிய போராட்டம்...விளக்கம் அளிக்க உத்தரவிட்ட தமிழக காங்கிரஸ்!
இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் முன்னாள் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி மாநில தலைவர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்ற பிறகு, முன்னாள் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர். இதனால், காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.