முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள்... வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் !

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள்... வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் !

5முறை முதலமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவரின் ஆட்சிக்காலத்தில், நாடே திரும்பிப் பார்க்கும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் இன்று அவரது 99வது பிறந்தாள் கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

குறிப்பாக தோட்டக்கலைத்துறை சார்பில் இன்றுமுதல் 5 ம் தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட விலங்குகள், பறவைகள் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இதனிடையே கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கல்தேர், மணிமண்டபம் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கல் தேரின் சக்கரங்கள் வண்ண விளக்குகளில் சுற்றுவது போல் காட்சியளித்து காண்போரை கவரச்செய்திருக்கிறது.