தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் காலமானார்...

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் காலமானார்...

1934 ஆம் ஆண்டு பிறந்த ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பிநராக இருந்ததார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.1967 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார். 1967 ஆம் ஆண்டு 1971 ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினராகவும் 1976 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராகவும் 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை அவர் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார். 87 வயதான அவர் உடல்நலக் குறைவால் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வீட்டில் காலமானார். அவருடைய உடல் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.