திமுகவில் இணையப்போகும் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால்?

அதிமுக-வின் முன்னாள் சபாநாயகர் தனபால் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் தவறானது என அவர் விளக்கமாளித்துள்ளார்.

திமுகவில் இணையப்போகும் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால்?

அதிமுக-வின் முன்னாள் சபாநாயகர் தனபால் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் தவறானது என அவர் விளக்கமாளித்துள்ளார்.

 எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காததால், முன்னாள் சபாநாயகர் தனபாலும் தற்போதைய அவிநாசி எம்.எல்.ஏ தி.மு.க.,வில் இணைவதாக, சமூக வலைதளங்களில், தகவல் பரவியது. இதுகுறித்து அறிந்த தனபால், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பேசிய தனபால், நான் தி.மு.க.,வில் இணைவதாக, தவறான தகவல் பரவி வருவது, கண்டனத்துக்குரியது; இதை நான் மறுக்கிறேன். கடந்த 1972ல், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கியபோது, எனது மாணவப்பருவத்தில் இருந்தே, அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

தனது, 45 ஆண்டுகால அரசியல் வரலாறு குறித்து அறியாதவர்கள், வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். எனது வாழ்க்கை அமைதியானது. எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு மாற்றத்தையும் விரும்பாதவன் நான். அ.தி.மு.க.,வில், ஏழு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் வாய்ப்புகளை அக்கட்சி வழங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், எனக்கு அத்தனை பதவிகளையும் வழங்கினார். அ.தி.மு.க., என்னை நன்றாக வைத்திருக்கிறது; ருமைப்படுத்தியிருக்கிறது. எனவே, கட்சிக்கு நான் விசுவாசமாக இருப்பேன் என அவர் கூறினார்.