மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை சுட்டு கொல்ல வனத்துறை உத்தரவு...

கூடலூரில், மனிதர்களையும், கால் நடைகளையும் அடித்து கொல்லும் ஆட்கொல்லி புலியை சுட்டு  கொல்ல  வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை சுட்டு கொல்ல வனத்துறை உத்தரவு...

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வெளியேறிய புலி, கடந்த 7 நாட்களாக அங்குள்ள தேவதை பகுதியில் சுற்றித்திரிந்து பெரும் அட்டகாசம் செய்து வருகிறது.  இதுவரை 20க்கு மேற்பட்ட கால்நடைகள், 3 மனிதர்களை  வேட்டையாடியுள்ளது. இந்த ஆட்க்கொல்லி புலியை  வலைவிரித்தும், கூண்டு வைத்தும் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 
ஆனால்  வனத்துறையின் பொறிக்கு பிடிபடாமல் ஆட்டம் காட்டி வரும்  ஆட்கொல்லி  புலி இன்று  மேலும் ஒருவரை கடித்து  கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிங்காரா வனப்பகுதியில் உள்ள குறும்பர் பாடி பகுதியில், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்பவர் புலியின்  தாக்குதலுக்கு  உயிரிழந்தவர் ஆவார்.

இதனிடையே புலியை சுட்டு கொல்ல வலியுறுத்தி  அந்த பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே ஆட்க்கொல்லி  புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதையடுத்து   வனத்துறையினர் அதக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால்  மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.