ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை... இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது...

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்டத்தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை... இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது...

ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட ஊடரங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளில், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது இன்று முதல், பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டருந்தது.

இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் வழக்கமாக மெரினா சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி செய்யும் மக்கள் காமராஜர் சாலையை ஒட்டி இருக்கக் கூடிய நடைபாதையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி 
மேற் கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று மெரினா கடற்கரைக்கு உள்ளே செல்லும் அனைத்து வாயில்களும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டிருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே இருக்கக்கூடிய லூப் சாலையில் மீன் மார்க்கெட்டிற்கு செல்லும் மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது தடையை மீறி கடற்கரைக்கு செல்பவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.