முதலமைச்சருக்கான 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை நிபுணர் குழு... தமிழக ஆளுநர் அறிவிப்பு...

தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவை பதவியேற்ற பின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

முதலமைச்சருக்கான 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை நிபுணர் குழு... தமிழக ஆளுநர் அறிவிப்பு...
ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபை முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்திலும் ஆளுநர் உரையாற்றி வருகிறார்.
 
தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு  அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 
 
ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகம், ஜீன் ட்ரெஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
இந்த குழு உறுப்பினர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.