மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட அறிக்கையில், வடக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதால், வடக்கு, தெற்கு, மத்திய வங்க கடல், ஆந்திரா, அந்தமான், மன்னார் வளைகுடா பகுதிகளில், 13ம் தேதி வரை, மணிக்கு 60 கி.மீ., வேகம் வரை பலத்த காற்று வீசும் என அறிவித்துள்ளது.  

இதேபோல், கேரளா, கர்நாடகா கடலோரம், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும், 13ம் தேதி வரை பலத்த காற்று வீசும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.