மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி..!  

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெறக் கோட்டைப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்களும், இரண்டு அதிகாரிகளும் சர்வதேச எல்லைக்குச் சென்று பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மீனவர் உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மரியாதை செலுத்தினார். பின்னர், கோட்டைப்பட்டினம் துணை மின் நிலையம் அருகே உள்ள மயானக் கரையில் மீனவர் ராஜ்கிரணின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.