இலங்கை கடற்படையால் தாக்கி தமிழக மீனவர் கொலை ... உடலை தர மறுக்கும் இலங்கை அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்...

இலங்கை கடற்ப்படையால் தாக்கப்பட்டு உயிரி ழந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இலங்கை அரசைக் கண்டித்து இன்று 2வது நாளாக 600க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையால் தாக்கி தமிழக மீனவர் கொலை ... உடலை தர மறுக்கும் இலங்கை அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்...

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ம் தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாராகக் கூறி சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை, ரோந்து கப்பலால் மோதி உடைத்துள்ளனர். இதில் படகு முழுவதுமாக முழ்கியதில், படகு ஓட்டுனர் ராஜ்கிரண் மாயமாகியுள்ளார். மீதமிருந்த சுகந்தன் (23), சேவியர் (32) ஆகியோர் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.

தத்தளித்த மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மாயமான மீனவர் ராஜ்கிரன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகத்திலிருந்து, தமிழக மீன்வளத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் இறந்த ராஜ்கிரணின் உடல் இன்று தமிழகத்திற்க்கு கொண்டு வரப்படும் என்று உறவினர்கள் மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் ராஜ்கிரணின் உடல் கிடைக்கவில்லை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மீனவர்கள்  உடலை தர மறுக்கும் இலங்கை அரசைக் கண்டித்தும், உடலை பெற்றுத்தர நடவடிக்கை மேற்க்கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்க்கரை சாலையில் இன்று இரண்டாவது நாளாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில்  மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இறந்த மீனவரின் உடலை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும், இறந்த மீனவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் மோதி மூழ்கடிக்கப்பட்ட விசைப் படகிற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.