மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்: அள்ளிச்சென்ற பொதுமக்கள்

மேட்டூர்  காவிரி கரையோர பகுதிகளில் திடீரென டன் கணக்கில் மீன்கள் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்: அள்ளிச்சென்ற பொதுமக்கள்

மேட்டூர்  காவிரி கரையோர பகுதிகளில் திடீரென டன் கணக்கில் மீன்கள் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 15,000 கன அடிநீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அணையையொட்டி உள்ள அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு 200  மெகாவாட் மின்னுற்பத்தி எடுக்கப் படுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் ஏற்கனவே காவிரியில் தேங்கி நிற்கும் நீருடன் கலந்ததால் வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அணையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளான அனல் மின் நிலைய நீரேற்று  நிலையம் அருகே தெர்மல் பாலம் வரை மீன்கள் டன் கணக்கில் மயங்கிய நிலையில் கரையில் ஒதுக்குகின்றன.

இதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பரிசலில் சென்று மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர்.