மதுரையில் பகீர் சம்பவம்...போலீசார் தீவிர விசாரணை!

மதுரையில் பகீர் சம்பவம்...போலீசார் தீவிர விசாரணை!

மதுரை திருமங்கலத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாகிச்சூடு சம்பவம்:

மதுரை திருமங்கலம் அருகே உள்ள காட்டு பத்தரகாளியம்மன் கோயிலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களுக்கான விருந்தோம்பல்  நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டு அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் VS இங்கிலாந்து: டி20 உலகக்கோப்பையை வென்றது யார்?

விசாரணை மேற்கொண்ட போலீசார்:

இதனைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

முன்விரோதம் காரணமா?:

அந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தனசேகரன் என்பவரை பிடித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் முன்விரோதத்தால் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது விசாரணையில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.