பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு...தீவிபத்தா அல்லது தற்கொலையா ? போலீஸ் விசாரணை..

பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு...தீவிபத்தா அல்லது தற்கொலையா ? போலீஸ் விசாரணை..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சத்தியநாராயணன். இவர் பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இன்று பிற்பகல் இவரது வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டினுள் சென்று பார்த்ததில் மீன்வளத்துறை அதிகாரி சத்தியநாராயணன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு  பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று மது அருந்திய நிலையில் வீட்டினுள் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு உயிரழந்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com