கொரேனாவால் உயிரிழந்த மாலைமுரசு தொலைக்காட்சி நிருபர் குடும்பத்துக்கு நிதியுதவி...

கடலூர் குறை நோய் தொற்றினால் உயிரிழந்த மாலை முரசு தொலைக்காட்சி சிதம்பரம் செய்தியாளர் ராஜியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கொரேனாவால் உயிரிழந்த மாலைமுரசு தொலைக்காட்சி நிருபர் குடும்பத்துக்கு நிதியுதவி...

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நல்லாசிரியர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிபிஎஸ் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி செய்தியாளர் ராஜி கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி அலமேலு மங்கையிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி அலமேலு மங்கை தமிழக அரசுக்கும் மாலை முரசு தொலைக்காட்சிக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.