ரயில்வே சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலி! நீச்சல் அடித்து தப்பிய மாமியார்!!

புதுக்கோட்டை அருகே காரில் சென்ற பெண் மருத்துவர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர், பொம்மாடிமலை, வெள்ளலூர், நார்த்தாமலை கீரனூர்  உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு  பலத்த மழை பெய்தது. அப்போது தொடையூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கம் வழியாக பெண் மருத்துவர் சத்யா என்பவர் தனது மமியாருடன் காரில் சென்றுள்ளார். ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதை அறியாமல் சென்றநிலையில் கார் சைலன்சரில் தண்ணீர் புகுந்து கார் நீருக்குள் முழ்கியது. இதில் இருவரும் காரில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த நிலையில் மாமியார் காரின் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து வெளியேறி உயிர் பிழைத்தார்.

ஆனால் சீட் பெல்ட் அணிந்திருந்த மருத்துவர் சத்யா காரிலிருந்து வெளியேற முடியாமல் தண்ணீரில் முழ்கி பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம மக்கள் தரைப்பாலத்தை மேம்பாலமான மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.