நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளிக்கு நல்ல விலை... ஓசூரில் விவசாயிகள் மகிழ்ச்சி...

ஒசூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளிக்கு நல்ல விலை... ஓசூரில் விவசாயிகள் மகிழ்ச்சி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளையும் தக்காளிகள் சந்தைகளில் தரம் பிரிக்கப்பட்டு  தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால், தக்காளி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
 
இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு  ஒசூர் பகுதிகளிலிருந்து தக்காளி ஏற்றுமதி அதிகரித்து, நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.