
சிற்றரசூர் கிராமத்தை சேர்ந்த ராமாமணி என்பவரை காணவில்லை என கூறி அவரது மனைவி கடந்த மாதம் 20ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த பெருமாள், சுந்தரமூர்த்தி ஆகியோரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், காட்டுப்பன்றிக்காக அவர்கள் அமைத்த மின்வேலியில் ராமாமணி சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவர்கள் அங்குள்ள மலைக்கு ராமாமணி உடலை இழுத்து சென்று குன்று நோக்கி வீசியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.