வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்... நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு!!!

வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்... நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏமாற்றுதல் மோசடி செய்தல் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சினிமா பிரபலங்களான இசையமைப்பாளர் தேவா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நகைச்சுவை நடிகர் வடிவேல் உள்ளிட்ட  பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம்  காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!