உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்களிலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு

அதிமுக ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க கெடு விதித்ததை அடுத்து  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில்  கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.