இறக்குமதி செய்த மணலை விற்பனை செய்ய கால அவகாசம் நீட்டிப்பு  

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்ய ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

கட்டுமான பணிக்காக மாதத்திற்கு 5 லட்சம் மெட்ரிக் டன் 2 வருடகாலத்திற்கு எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக இறக்குமதி மணலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதால் அந்த மணல் அப்படியே தேங்கியது. எனவே முதலாவதாக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது சுமார் 20 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனையானது. இரண்டாவது முறை வழங்கப்பட்ட கால அவகாசத்தில் குறைவான அளவே மணல் விற்பனை ஆகின. 3 துறைமுகங்களில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனை செய்யப்படாமல் தேங்கி நிற்பதால் ஒப்பந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு மேலும் கால அவகாசம் வழங்கியது.  

கொரோனா பரவல் காலத்தில் தடை விதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஒப்பந்த நிறுவனத்திற்கு மணலை விற்பனை செய்ய  தற்போது 10 மாத காலம் கூடுதல் அவகாசம் அதாவது ஜூன் 2022 வரை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.