நீர்பிடிப்பு 4 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த தம்பதிகள்... மரங்களை வெட்டியதால் மயங்கி விழுந்தனர்...

தோட்டத்தை பாதுகாத்த தம்பதிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

நீர்பிடிப்பு 4 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த தம்பதிகள்... மரங்களை வெட்டியதால் மயங்கி விழுந்தனர்...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில் 4 ஏக்கர் அரசு நிலத்தில் 30 ஆண்டுகாலமாக கலைச்செல்வன் என்பவர் தென்னை, கொய்யா, வாழை மரங்களும் கத்தரி , வெண்டை தோட்டம் அமைத்து விவசாயம் செய்து தனது அனுபவத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு சென்றதை அடுத்து மூன்று முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதனை அடுத்து அதிகாரிகள் கலைச்செல்வன் அரசு இடத்தில் வளர்த்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போது கலைச்செல்வன் தரப்பினருக்கும் அதிகாரி தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே போலீசார் துணையுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது அந்த தோட்டத்தில் 4 ஏக்கரில் வளர்த்து வந்த தென்னை, கொய்யா ,வேப்பமரம் , மற்றும் கத்தரி ,வெண்டி செடிகளையும் வேருடன் இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். மரங்கள் அழிவதை பார்த்த கலைச்செல்வன் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கணவன் மயங்கி விழுந்ததை கேள்விப்பட்ட அமிர்தவள்ளி கணவனின் நிலையை கண்டு அவரும் மயங்கி விழுந்தார். இதனையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர். 

ஆக்கரமிப்பு நிலங்களில் இருந்த இயற்கை வளங்களை அதிகாரிகள் அழித்தது, இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரைக்கு செல்லும் வழியில் இச்சம்பவத்தை பார்த்த மானகிரியை சேர்ந்த விவசாயி இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும், அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.